⚓PTA பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல் குறித்து மாநில பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலாளர் கடிதம்.
![]() |
| CCK-PTA |
பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளரின் கடிதத்தின் விவரம்👇
அன்புடையீர்,
ந.க.எண்.451/5/2026, நாள்: .08.2026
பொருள். பள்ளிக் கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகம் - பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்பு முறையாகச் செயல்பட அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளின்படி பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு பொதுக்குழுக் கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்குமான வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.
![]() |
| cckkalviseithikal |
எனவே, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் திருத்திய வழிகாட்டுதல்களுக்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டப் பிறகு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செயலாளர்
மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்


0 Comments