CCK Education News

📡ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை (Genuineness of Educational Certificate) சரிபார்க்க உத்தரவு.

📡ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை (Genuineness of Educational Certificate) சரிபார்க்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு. விவரம் 👇 

Click here


Elementary-Director-Order
Elementary-Director-Order


📡தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6


முன்னிலை முனைவர் பூ.ஆ.நரேஷ்

ந.க.எண். 16274/டி1/2026, நாள். 14.08.2026


📡பொருள்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலை/ அரசு நகராட்சி/ மாநகராட்சி/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை (Genuineness of Educational Certificate) அறியப்படுதல் குறித்தான அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.


📡பார்வை:

cckkalviseithikal

தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை / அரசு / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் மற்றும் புதிதாக நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரின் கல்விச் சான்றுகளும் உண்மைத் தன்மை அறியப்படுதல் குறித்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் வரப்பெறுவதால் அவ்வற்றின் மீது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து விவரம் கீழ்காணுமாறு தெரிவிக்கப்படுகிறது.


புதிதாக நேரடி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களின் அனைத்து வகை கல்விச் சான்றுகளையும் உரிய கல்வி நிறுவனம் / பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் / அரசுத் தேர்வுகள் இயக்கக அலுவலருக்கு அனுப்பி உண்மைத் தன்மை (Genuineness of Educational Certificate) அறியப்படுதல் வேண்டும்.


இந்த உண்மைத் தண்மை அறிதல் என்பது பணியில் சேர்ந்த பின்பு தகுதிகாண் பருவம் முடிக்கும் நாளிலேயே அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.


பணிபுரிந்து வரும் இதர தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ வட்டராக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பயின்று பெற்றுள்ள கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்டவிவரம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.


பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் அனைத்துக் கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறிப்பட்ட விவரம் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதை பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டுக்கு முன்னரே அனைத்துப் பதிவுகளும் சரியாக உள்ளதா என பணிப்பதிவேடு பராமரித்து வரும் அலுவலர்கள் சரியாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை அறியப்பட்டபின்பு மீளவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல்கலைக்கழகத்திற்கோ உண்மைத் தன்மை அறிய அனுப்பத் தேவையில்லை.


உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் அனைத்தும் உரிய கால நேரத்தில் பெறப்பட வேண்டும் அவ்வாறு செய்யாமல் 10 ஆண்டுகள் கழித்து தேர்வுநிலை அல்லது 20 ஆண்டுகள் கழித்து சிறப்பு நிலை அனுமதிக்கும் போதும், மேலும் ஓய்வு பெறும் காலம் வரை மேற்கண்டவாறு உண்மைத் தன்மை அறியப்படுவதற்காக அலைகழிக்கப்படுகின்றனர் என பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.


cckkalviseithikal

மேலும், பல ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாள் வரை கல்விச் சான்றுகள் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரம் பெறப்படாமல் ஓய்வு பெறும் நாளில் தனியரின் கல்விச் சான்று உண்மைத் தன்மை அற்றது என அறிக்கை பெறப்பட்டுள்ளது என்றும், அதனடிப்படையில் அவ்வாசிரியரை பணியிலிருந்து ஓய்வு பெற வட்டாரக் கல்வி அலுவலர்/மாவட்டக் கல்வி அலுவலர்களால் அனுமதி மறுக்கப்படுவதும், ஓய்வூதிய பணப்பலன்கள் நிறுத்திவைப்பதும் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு அதனால் அவ்வாசிரியர்கள் நீதிமன்றம் சென்று துறைக்கு எதிரான தீர்ப்புகள் பெற்று வருகின்றனர்.


எனவே, இந்நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு நியமன அலுவலர்கள் / ஊதியம் பெற்று வழங்கும். அலுவலர்கள் பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலர்கள் இனி வருங்காலங்களில் இதுபோன்ற புகார்ளுக்கு இடமளிக்காவகையில் உடனடியாக உரிய கால நேரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றினை உண்மைத் தன்மை அறியும் பொருட்டு உரிய அலுவலர் நிறுவனத்திற்கு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியப்பட்ட விவரத்தின் நகலினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்வதுடன் அவ்விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.


அத்துடன் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத் தன்மை அற்றது/போலியானது என அறிக்கை ஏதும் பெறப்பட்டால் அவ்வாசிரியர் மீது உடனடியாக காவல் துறையின் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் அதன் தொடர்ச்சியாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறியும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் கால தாமதம் ஏற்பட்டு அதனால் அவ்வாசிரியர்களின் ஓய்வு காலம் வரை உண்மைத் தன்மை அறியப்படாமல் உள்ள நிகழ்வினால் போலியான கல்விச் சான்று அளித்து பணியில் சேர்ந்த ஆசிரியர்களால் துறைக்கும் பெரும் நிதியிழப்பு ஏற்படுத்திய காரணத்தினால் இப்பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாமல் . காலம் தாழ்த்திய அனைத்து நிலையில் உள்ள அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


தற்போது கல்விச் சான்றுகள் உண்மை தன்மை அற்றது/போலியானது என அறிக்கை பெறப்பட்டு நாளது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை தொகுத்து அறிக்கையாக இயக்குநருக்கு உடன் அனுப்பிட வேண்டும், இவ்விவரங்களை


மாவட்டக் கல்வி அலுவலர்கள் வட்டராக் கல்வி அலுவலகங்களுக்கு ஆய்வு செல்லும் போது இதனை தனிக் கவனம் கொண்டு கண்காணிக்க வேண்டும். 


cckkalviseithikal

இச்செயல்முறைகளை அனைத்துச் சார்நிலை அலுவலர்களான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்று கோப்பில் சேர்க்கப்பட வேண்டும். இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை உடன் அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தொடக்கக்கல்வி இயக்குநர்


பெறுநர்: அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி)

Post a Comment

0 Comments