CCK Education News

🆘காலை உணவுத் திட்டம் (PKBFS) - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு.

🆘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் (PKBFS) - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு.



PKBFS
PKBFS

Click here


🆘பார்வை 1-ல் படிக்கப்பட்ட அரசாணையின்படி மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 16 மாவட்டங்கள் 17 வட்டாரங்கள் 346 ஊராட்சியில் உள்ள 963 பள்ளிகளில் பரிச்சாத்த முறையில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டு முதல் 6 வரை படிக்கப்பட்ட அரசாணைகளின்படி ஊரகப் பகுதிகளில் மற்றும் நகரப்புரப் பகுதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் (ம) அரசு


cckkalviseithikal

🆘உதவிப் பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.


🆘மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், 15.06.2026 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 6ம் முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதியன்று விரிவாக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே வகுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயரிட்டு தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விரிவுப்படுத்தி. பார்வை 8ல் காணும் அரசாணை வழி அனுமதி அளிக்கப்பட்டது.


🆘காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்


விரிவுப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 15,14,274 மாணவ மாணவியர்கள் பயனடைவர். ஊரகப் பகுதிகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பால், பேரூராட்சி பகுதிகளில், பகுதி அளவிலான கூட்டமைப்பால் முன்மொழியப்பட்டு முதன்மை குழுவால் (Core Committee) தேர்வுசெய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த மகளிர், பள்ளி சமையலறை மையங்களை நிர்வகிப்பதுடன் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற பணியிலும் ஈடுபடுவார்கள்.


🆘A) கிராம ஊராட்சி அளவிலான /பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழு (Core Committee)


காலை உணவுத் திட்டத்திற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள முதன்மைக் குழுக்கள் திட்ட விரிவாக்கத்திற்கும் தொடர்ந்து செயல்பட வேண்டும்.


திட்டம் புதியதாக செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊராட்சி /பேரூராட்சி அளவில் ஒரு முதன்மைக் குழு அமைக்கப்பட வேண்டும்.


🆘அ) ஊரகப் பகுதிகளில் முதன்மைக் குழு கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்டு முதன்மைக் குழு அமைக்கப்பட வேண்டும்.


1. ஊராட்சி மன்றத் தலைவர் / தொடர்புடைய ஊராட்சியின் தனி அலுவலர்.

cckkalviseithikal

2. அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்/அரசு உதவிப்பெறும் பள்ளி முதல்வர்.


3. பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர்.


4. பள்ளி மேலாண்மை குழுவின் ஒரு பிரதிநிதி.


5. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஒரு பிரதிநிதி.


🆘ஆ) பேரூராட்சி பகுதிகளில் முதன்மைக் குழு கீழ்காணும் உறுப்பினர்களைக் கொண்டு முதன்மைக் குழு அமைக்கப்பட வேண்டும்.


1. பேரூராட்சி நகர்மன்ற தலைவர்/ தொடர்புடைய பேரூராட்சியின் செயல் அலுவலர்.


2. அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்/அரசு உதவி பெறும் பள்ளி முதல்வர்.


3. பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர்.


4. பள்ளி மேலாண்மை குழுவின் ஒரு பிரதிநிதி.


5. பகுதி அளவிலான கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஒரு பிரதிநிதி


பள்ளியின் தலைமை ஆசிரியர் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.


சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகளின்படி அனைத்து கிராம அளவிலான பகுதி மற்றும் நகர்ப்புர அளவிலான பகுதிகளிலும் கிராம ஊராட்சி / பேரூராட்சி அளவிலான முதன்மை குழு அமைக்கப்பட வேண்டும்.


இம்முதன்மைக் குழு. சுய உதவிக் குழு உறுப்பினர் ஆகியவற்றை தேர்வு செய்வதுடன், முன்னுரிமை அடிப்படையில் அதே மையத்தில் மதிய உணவு சமையற் கூடத்தை காலை உணவு சமைப்பதற்கான இடமாகவும் இறுதி செய்ய வேண்டும்.


மதிய உணவு திட்டம் செயல்படும் சத்துணவு கூடம், அரசுப் பள்ளி/அரசு உதவிப்பெறும் பள்ளி வளாகத்தினுள் ஒரு கட்டிடம் ஆகியவற்றுள் ஏதேனும் சேமிப்பு வசதியுள்ள, முதன்மைக் குழுவால் தேர்வு செய்யப்படும் கட்டிடத்தினை அரசு நிதி உதவிப்பெறும் பள்ளி நிர்வாகக்குழு, சமையல் கூடத்திற்கென ஒதுக்கீடு செய்து வழங்கப்பட வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடத்தில் மின்சாரம் / மின்விளக்கு வசதி இருப்பதனை வட்டார வளர்ச்சி அலுவலர் / பேரூராட்சி செயல் அலுவலர் அரசு/அரசு நிதி உதவிப்பெறும் பள்ளி நிர்வாகக்குழு உறுதி செய்ய வேண்டும். மேலும் இம்மையத்திற்கான குடிநீர் ஏற்கெனவே உள்ள குடிநீர் இணைப்பிலிருந்து வழங்கலாம்.


cckkalviseithikal

மலைப்பிரதேசம் மற்றும் உட்கடை கிராமங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் எவ்வித இடர்பாடுமின்றி காலை உணவை சமைத்து மாணவர்களுக்கு வழங்கிட சுய உதவிக் குழு உறுப்பினர் உடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.


தட்டு மற்றும் குவளை போன்றவைகள் தேவைப்படும் இடங்களில் உள்ளாட்சி பொது நிதி அல்லது பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (CSR Fund) மூலம் ஏற்பாடு செய்திட வேண்டும்.


காலை உணவுத் திட்டம் தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலை உணவு வகைகள், பொதுவான வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை தற்போதைய விரிவாக்கத்திற்கும் பொருந்தும்.


சுய உதவிக் குழு செயல்பாட்டில் ஏதேனும் தவறு / ஒழுங்கின்மை /முறைகேடு கண்டறியப்பட்டால், உடனடியாக சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) / மண்டல உதவித் திட்ட அலுவலர் / நேர்முக உதவியாளர்(சத்துணவு) மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மாவட்ட இயக்க மேலாண்மை அலகு) கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்களால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மற்றும் வட்டார அளவில் வட்டார வளர்ச்சி தலைமையில் மாதந்தோறும் தேவையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அனைத்துத் துறைகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

மேலும் கூடுதல் தகவல்கள் pdf இல் பார்க்கவும்.


Post a Comment

0 Comments