CCK Education News

📔சிறார், ஆசிரியர் இதழ் பொறுப்பாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி.

📔சிறார், ஆசிரியர் இதழ் பொறுப்பாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி.


Click here

Teachers-day
Teachers day 



சிறார், ஆசிரியர் இதழ் பொறுப்பாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.


ந.க.எண்.19538/எம்/இ2/2022, நாள்.03.09.2026.


பொருள்:

பள்ளிக்கல்வி சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்கள் பணி 2026- 27 ஆம் கல்வியாண்டில் தேன்சிட்டு, புது ஊஞ்சல் மற்றும் கனவு ஆசிரியர் இதழ்களில் படைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் பணிமனை முகாம் 9-11 செப்டம்பர் 2026 - மூன்று நாட்கள் - சேலம் மாவட்டம், ஏற்காடு, Holy Cross Spirituality Centre இல் நடைபெறுதல் சார்பு.


பார்வை

பள்ளிக்கல்வி இயக்கக இதே எண்ணிட்ட கடிதம், நாள். 25.06.2024.


பள்ளிக்கல்வித்துறையின் தேன்சிட்டு, புது ஊஞ்சல் மற்றும் கனவு ஆசிரியர் ஆகிய சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்களில் 2026-27 ஆம் கல்வியாண்டில் படைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் பணிமனை முகாம் 2026 செப்டம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சேலம் மாவட்டம், ஏற்காடு, Holy Cross Spirituality Centre-இல் நடைபெற உள்ளது.


இதுசார்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் படைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்ற கேட்புப் படிவத்தில் விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.


எனவே. இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை இப்பயிற்சியில் பங்கேற்குமாறு அறிவுறுத்திடவும் பயிற்சி நடைபெறும் இடம் மலைப்பகுதி என்பதால், முந்தைய தினத்தன்று பிற்பகலே பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேருவதற்கு ஏதுவாக 7 செப்டம்பர் 26 பிற்பகல் இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களைப் பள்ளியிருந்து பணி விடுவிப்பு செய்யுமாறும் சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-இணை இயக்குநர் 

பள்ளிக்கல்வி

Post a Comment

0 Comments