CCK Education News

✍️TET குறித்த சட்டசபை தீர்மானத்தால் என்ன நன்மை??

 ✍️TET குறித்த சட்டசபை தீர்மானத்தால் என்ன நன்மை??

TET
CCK-TET 


2,00,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் என்ன நன்மை நடக்கப் போகிறது?


கேட்டது என்ன?

பணிக்காலத்திற்கு ஆண்டுக்கொரு மதிப்பெண் எனக் கருணை மதிப்பெண் வழங்கி சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்!


நீதிமன்றம் சொன்னது என்ன?

கருணை மதிப்பெண் கோருவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு தரப்பு ஏன் பரிசீலிக்கக் கூடாது  எனக் கேட்டது.


அரசு தரப்பில் என்ன பதில்?

கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசு தரப்பில் உரிய கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு கால அவகாசம் கோரப்பட்டது.


கோரியபடியே அவகாசமும் தரப்பட்டது!


மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் தரப்பட்டது!


இரண்டு முறை அவகாசம் கேட்டதால், கண்டிப்பாக ஏதோ நல்ல செய்தியாகத்தான் சொல்லப்படும் என்று இலட்சக் கணக்கான ஆசிரியர்கள் ஆவலோடு காத்திருந்தனர்!


நடந்தது என்ன?

No grace mark!

No relaxation in minimum cut off marks!


காரணம்?

NCTE Notification ல் இல்லையாம்!

RTE Act ல் சொல்லப்படவில்லையாம்!

Supreme court ல் தீர்ப்பு கடுமையாகத் தரப்பட்டதால் எதுவும் செய்ய முடியாதாம்! 


கருணை மதிப்பெண் கேட்டதில் என்ன தவறு?

அரசாணை 181ல் அரசுதானே சொல்லியது- ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது புதிய நியமனங்களுக்கு மட்டுமே! ஏற்கனவே பணியாற்றிக் கொண்டு இருப்போருக்குத் தேவையில்லை!


அரசு தானே 2010 முதல் 2022 வரை தகுதித் தேர்வைக் கணக்கில் கொள்ளாமல் பதவி உயர்வு வழங்கியது?


அரசு தரப்பு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி எழுதாமல் போய்விட்டோமா?


2010ல் வைக்க வேண்டிய தேர்வை 15 ஆண்டுகள் கழித்து தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் கட்டாய ஓய்வில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கடுமையான தீர்ப்புக்கு யார் காரணம்?


ஆசிரியர்களா? அல்லது 

எழுதத் தேவையில்லை என்ற அரசாணையா? அல்லது 

தகுதித் தேர்வு பற்றிக் கணக்கில் கொள்ளாமல் பதவி உயர்வு கொடுத்ததா?


20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் பணியாற்றிய பின் தகுதியற்ற ஆசிரியர்களாய் பட்டமளிக்கப்பட யார் காரணம்?


20 வயதில் சாதிக்க வேண்டியதை 55 வயதிலும் சாதிக்க வேண்டும் எனக் கட்டளையிடுவது தர்மமா?


2010ல் இருந்த திறமைகள் 2026லும் இருக்குமா?

காலதாமதமாகத் தேர்வு எழுத வைத்தது யார்?


கருணை மதிப்பெண்ணை வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தெரிவித்திருக்கலாம்!


அல்லது ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் தர முடியாது. குறைவாகத்தான் மதிப்பெண்களை வழங்க முடியும் என்றாவது சொல்லியிருக்கலாம்!

அல்லது

நீதிமன்றம் வழங்குமாறு உத்தரவிட்டால், கருணை மதிப்பெண்கள் வழங்க முடியும் என்றாவது சொல்லியிருக்கலாம் அல்லவா?

அல்லது, 

நடந்து முடிந்த தேர்வில் சாத்தியமில்லை. ஆனால் 

அடுத்த தேர்வில் வாய்ப்பிருப்பதாகவாவது சொல்லி இருக்கலாம்!


ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு தரப்பின் பதில் மனு, 2,00,000 க்கும் மேற்பட்ட மூத்த ஆசிரியர்களின் இதயத்தில் ஈட்டியைச் சொருகியது!


வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது!


எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!


காலம்தான் பதில் சொல்லும்!


கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் கருணை இல்லை!


ஆனால், தேர்வு தேவையில்லை என்று தீர்மானம் போட்டதுதான் ஆச்சர்யமோ ஆச்சர்யம்!


மூத்த ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியோ..மகிழ்ச்சி!


தீர்மானத்தைப் பார்த்தவுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மாற்றிவிடுமா?


மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்துவிடுமா?


TET சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட தனி மசோதாவே கிடப்பில் போடப்பட்டுள்ளது!


ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!


 "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்"


இந்தத் தீர்மானம் இன்னும் பல சிக்கல்களைக் கொண்டு வரும்..

பதவி உயர்வு என்பது கானல் நீர் தன்.. 

✍️Credit goes to the Writer 

Post a Comment

0 Comments