✍️TET தேர்வை ரத்து செய்து சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என த.வெ.க எம்எல்ஏ சட்டசபையில் பேச்சு.
இன்று 24.08.2026 சட்டசபையில் பேசிய குடியாத்தம் எம்எல்ஏ சிந்து அவர்களின் பேச்சு விவரம் வருமாறு.
✍️TET தேர்வை ரத்து செய்து சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என த.வெ.க எம்எல்ஏ சட்டசபையில் பேச்சு.
![]() |
| CCK-News |
✍️ தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
✍️ ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அதன் பின்னர் பணி நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற்றும் சிலருக்கு வேலை கிடைக்கவில்லை.
✍️நானும் டெட் தேர்வு, டிஆர்பி தேர்வு, நியமன தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை.
✍️நியமன தேர்வு இல்லாமல் தகுதி தேர்வு அடிப்படையிலும், சீனியாரிட்டி அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
✍️ஆசிரியர்களின் பாதி வாழ்க்கை வேலையை எதிர்பார்த்தே போய்விடுகிறது.
✍️ இவ்வாறு சட்டப்பேரவையில் குடியாத்தம் எம்.எல்.ஏ சிந்து அவர்கள் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

0 Comments