CCK Education News

📢இன்று 24.08.2026 சட்டசபையில் அறிவிக்கப்பட்ட கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் விவரம்.

📢இன்று 24.08.2026 சட்டசபையில் அறிவிக்கப்பட்ட கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் விவரம்.


இன்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 31 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் pdf👇 

Click here


CCK-Announcements
CCK-Announcements


அறிவிப்புகள் 2026-2027

cckkalviseithikal

1.தமிழ்நாடு - அறிவுப் பாடத்திட்டம்.

TN-ARIVU Analytical thinking, Reasoning, Innovation, Venture & entrepreneurship, Upskilling with Artifical Intelligence & Emerging Technology.

திறன்களை வளர்த்து தலைமுறை உயர்த்த எதிர்காலத்திற்குத் தயாராகும் வகையில் பகுத்தறிந்து சிந்தித்தல், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், புதுமையான கருத்துகளை உருவாக்குதல், தொழில்முனைவுத் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதல் ஆகிய திறன்களை உள்ளடக்கிய இப்பாடத்திட்டம் TN-ARIVU 2027-28 ஆம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

இப்புதிய பாடத்திட்டம், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை Arivu Foundation, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை Arivu Discovery, 9 12ஆம் வகுப்பு வரை Arivu Edge என்ற வளர்ச்சிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு தொடக்கநிலையில் வலுவான அடித்தளத்தையும், நடுநிலையில் ஆழமான புரிதலையும், உயர்நிலையில் வாழ்வியல், பணிவாய்ப்பு மற்றும் எதிர்காலத் திறன்களையும் மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.


TN ARIVU The new curriculum for equipping students with future ready Knowledge, including analytical thinking, problem-solving, innovation, entrepreneurship, proficiency in Artificial Intelligence and emerging technologies will be implemented across all schools in Tamil Nadu from the Academic Year 2027-28.


2. திறன் ப்ளஸ்.

THIRAN PLUS Targeted Help for Improving Remediation and Academic Nurturing.

ஒவ்வொரு மாணவரும் திறனுடன் ... ஒவ்வொரு வகுப்பும் வெற்றியுடன் என்ற இந்நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில், 2 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வகுப்பு நிலைக்கேற்ற எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் 10.5 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், "திறன் ப்ளஸ்" ரூ. 12.05 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.

அரசுப் பள்ளிகளில் 2 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணறிவுத் வகுப்பு நிலைக்கேற்ற எழுத்தறிவு மற்றும் திறன்களை உறுதிப்படுத்தும் நோக்கில், மாணவர்களின் கற்றல் முன்னேற்றம், திறன்சார்ந்த மதிப்பீடுகள் வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கற்றல் இடைவெளிகள் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு, தேவைக்கேற்ற குறைதீர் கற்றல் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் வகுப்பிற்கேற்ற கற்றல் திறன்களை முழுமையாக அடைவதோடு மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, சிந்தனைத்திறன் மற்றும் தொடர்ச்சியான கற்றல் மனப்பாங்குடன் உயர்கல்வி மற்றும் எதிர்கால வாழ்வின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வலுவான அடித்தளத்தைப் பெறுவர்.


THIRAN PLUS Targeted Help for Improving Remediation and Academic Nurturing will be expanded for students of Classes II to IX benefiting 10.5 lakh students at a cost of Rs. 12.05 crore.


3. தமிழ்நாடு தன்னிலைக் கற்றல் திட்டம்.

TN-PAL - Tamil Nadu - Personalised Adaptive Learning.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றலை வலுப்படுத்தும் வகையிலும் தனிப்பயனாக்கப்பட்ட முன்னேற்றம் கிடைக்கும் வகையிலும், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த 'தமிழ்நாடு தன்நிலைக் கற்றல்' திட்டம், முதற்கட்டமாக 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றல் திறனும் வேகமும் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஏற்ப, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவம் வழங்கப்படும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு கற்றல் இடைவெளிகள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் அவரவர் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு தகவமைக்கப்பட்ட கற்றல் வழிகாட்டுதல் வழங்கப்படும். இதன் வாயிலாக மாணவர்கள், தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி, தன்னம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் கற்றலில் சிறந்து விளங்குவதற்கான எதிர்காலக் கல்விச்சூழல் உருவாக்கப்படும்.

Al powered Personalised and Adaptive Learning (TN-PAL) will be launched in the first phase across 500 Government Middle Schools for students of Classes VI to VIII, enabling every learner to progress at their own pace at a cost of Rs. 70 lakh.


4. தமிழ்நாடு பள்ளிகளுக்கான மேம்படுத்தப்பட்ட செயற்கை எந்திரனியல் மற்றும் இணையதள கல்வி நுண்ணறிவு, கருவிகளுக்கான திட்டம்.

TN SPARK Tamil Nadu School Programme for Al, Robotics & Knowledge of online tools.

இன்றைய மாணவர்களை நாளைய தொழில்நுட்ப முன்னோடிகளாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல், புதுமை மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று நிலைகளில் "TN SPARK" ரூ. 2.72 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவாக்கப்படும்.

எதிர்கால உலகின் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், கணினிசார் சிந்தனை, தர்க்கரீதியான பகுப்பாய்வு, படைப்பாற்றல், குழுவாக இணைந்து செயல்படும் திறன் மற்றும் சூழலுக்கேற்ற முடிவெடுக்கும் திறன்களை வளர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னுரு தொழில்நுட்பப் பாடத்திட்டமானது விரிவாக்கப்படும்.

இது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அடிப்படை நிலையாகவும் (Foundational Stage), 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு លេ (Intermediate Stage), 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு விருப்பப் பாடமாகவும் (Elective Subject) வடிவமைக்கப்படும்.

TN SPARK, an Integrated Artificial Intelligence and Digital Technologies Curriculum, will be expanded and implemented in three stages for students of Classes VI to XII to equip them with future-ready digital, innovation and problem-solving skills at a cost of Rs. 2.72 crore.


5. வெற்றிப் பாதை - Vetri Paathai

கனவுகள் உயரட்டும், வெற்றிக்கான வாய்ப்புகள் பள்ளிக்கே வரட்டும் என்ற நோக்கில் 172 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்று நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் வகையில், 'வெற்றிப் பாதை' திட்டம் ет. 22.36 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும்.

172 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பள்ளியிலேயே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக தரமான பயிற்சி, மாதிரித் தேர்வுகள் மற்றும் தொடர்ச்சியான கல்வி வழிகாட்டுதலைப் பெறும் வகையில் "வெற்றிப்பாதை திட்டம்" செயல்படுத்தப்படும். மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி எதுவாக இருப்பினும் திறமையும் உழைப்பும் கொண்ட மாணவர்கள், நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதற்கு வெற்றிப்பாதைத் திட்டம் வழிவகுக்கும். இத்திட்டம், ரூ. 22.36 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

Vetri Paathai Scheme will be implemented in 172 Government Higher Secondary Schools, providing coaching, model tests and continuous guidance to help Government School students secure admissions to India's premier higher education institutions at a cost of Rs. 22.36 crore.


6. மதிச்சுடர் - MATHICHUDAR.

தீர்க்கும் திறன் மாணவர்கள் சிந்தித்து சாதிக்கும் தலைமுறைகளாக மாறும் வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வுச் சிந்தனை மற்றும் சிக்கல்களைத் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு திறன் அடிப்படையிலான “மதிச்சுடர் திட்டம்" மதிப்பீடு 2026-2027ஆம் கல்வியாண்டில் ரூ. 18.01 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

வகுப்பறைக் கற்றல் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில், "மதிச்சுடர்" திட்டத்தின்கீழ், வகுப்புவாரியான கற்றல் விளைவுகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப உயர் சிந்தனை வினாக்கள் மூலமாக 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ. 18.01 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் வாயிலாக, மாணவர்களைக் கட்டமைக்கப்பட்ட திறன் அடிப்படையிலான மதிப்பீடுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயார்படுத்தி, கற்றல் விளைவுகளை மேம்படுத்த வழிவகுக்கப்படும்.

Competency-based assessment, essential for enhancing students' conceptual understanding, critical thinking, and problem-solving skills, will be introduced for Government school students in classes 6 to 12 at a cost of Rs. 18.01 crore.


7. திறன்மிகு அறிவியல் ஆய்வகங்கள்.

SMART SCIENCE LAB.

அறிவியலை சிந்தித்து ஆய்வகத்தில் செயல்படுத்திட 1799 அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில்மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் 'திறன்மிகு அறிவியல் ஆய்வகங்களுக்கு' ரூ. 21. 84 கோடி நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கப்படும்.

மாணவர்கள் பாடப்புத்தகங்களில் கற்றுணர்ந்து கொள்ளும் கருத்துகளைச் செய்முறையில் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திறன்மிகு ஆய்வகங்கள் 1779 அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் உருவாக்கப்படும். இவற்றுள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 604 ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டம், ரூ. 21.84 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Science Lab equipment will be provided in 1,779 Government High and Higher secondary schools to cater to curriculum requirement, foster scientific thinking among students at a cost of Rs. 21.84 crore.


8. தமிழ்நாடு மாணவர் புதுமை மற்றும் தொழில்முனைவுத்திறன் மேம்பாட்டுத் திட்டம்.

TN IGNITE Innovation Growth Networking Ideation Technology Entrepreneurship.

புதுமையாக சிந்தித்து படைப்பில் முன்னேற மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளைச் சமூக முன்னேற்றத்திற்கான தீர்வுகளாக மாற்றும் வகையில், தமிழ்நாடு மாணவர் புதுமை மற்றும் தொழில்முனைவுத்திறன் மேம்பாட்டுத் திட்டமானது 3,205 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 4.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு, அவற்றிற்குப் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் திறனை வளர்த்தெடுக்கும்வகையில், தொழில் வல்லுநர்களின் வழிகாட்டுதல், செயல்வழிக் கற்றல் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். எதிர்காலப் பணிவாய்ப்புகளுக்கும் அறிவுசார் பொருளாதாரத்திற்கும் தேவையான படைப்பாற்றல், தலைமைத்திறன், தொழில்முனைவு மனப்பாங்கு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்கும் இம்முயற்சி, அரசுப்பள்ளி மாணவர்களைப் பணிநாடுநர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்குப் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தும் புதுமையாளர்களாகவும் உருவாக்கும் இத்திட்டம், 3205 மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 4.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அரசு

TN IGNITE will be implemented in 3,205 Government Higher Secondary Schools to nurture innovation, entrepreneurship and future-ready leadership among students through hands-on learning and industry mentorship at a cost of Rs. 4.82 crore.


9. மகிழ்வுடன் முன்னேறு Magizhvudan Munneru.

மாணவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறமையை உலகத்திற்கு வெளிக்கொணரும் வகையில் மாணவர்களின் படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித்திறமைகள் மற்றும் கற்றல் ஆர்வம் மலர, புத்தகம் இல்லா கல்வியாக, 'மகிழ்வுடன் முன்னேறு' திட்டம் 6279 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் ९. 1.89 கோடி நிதி ஒதுக்கீட்டில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்.

கல்வியாண்டின் ஒவ்வொரு பருவத்தின் கடைசி வேலை நாளிலும், மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தவும், புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளவும், நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்துவதன் வாயிலாகத் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், சக மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கவும் ஏதுவாக பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் இந்நிகழ்வு, 6279 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 1.89 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

To bring out students' skills, creativity, leadership qualities and individual talents, and to make their learning experience joyful and enriching, Magizhvudan Munneru scheme will be introduced in 6279 Government High and Higher secondary schools at a cost of Rs. 1.89 crore.



10.வாசிப்பை நேசிப்போம் - Vasippai Nesippom


11.தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர்மூச்சு


12.ஸ்போரட்ஸ் பிளஸ் Sports Plus


12.சதுரங்கம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் -Chess and Traditional Games


13.ஒளிரும் புன்னகை (Dental, Eye & Ear Health)


14.உயர்கல்வி வழிகாட்டிச் செயலி - Higher Education Guidance App


15.மாற்றுத்திறன் மாணவர்களின் திறன்களை உயர்த்தும் முன்னெடுப்பு - ENABLE


16. துணை Thunai


17மாற்றுத்திறன் மாணவர்களின் திறன்களை உயர்த்தும் முன்னெடுப்பு - ENABLE


18.பாதுகாப்பான பள்ளி - மகிழ்வான கற்றல் - Safe Schools Enabling Joyful Learning.


19.ஆசிரியர்களுக்கான பன்னாட்டு சிறப்புத் திறன் மேம்பாட்டுத் LL - International Teacher Excellence Programme


20.ஆசிரியர்களுக்கான கல்விசார் திட்டமிடல் மற்றும் செயலாக்கப் பயிற்சி -TN-LEADS


21.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னுரு மாற்றம் -Digital transformation of Teachers Recruitment Board


22.அரசுத் தேர்வு ஆவணங்களை மின்னணுமயமாக்கல் -Digitisation of Government Examination Records


23.ஸ்மார்ட் நூலக உறுப்பினர் அட்டை - Smart Library Card


24.நூலக செயலி - Noolagam App


25.நூலகங்களில் சுகாதாரமான சூழல் Hygienic Libraries Happy Readers


26.இளைய தலைமுறைக்கு அரிய நூல்கள் 26


27.சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு அரசு மானியம் உயர்வு


28.சீருடையில் சிறப்பு விளையாட்டில் தன்னம்பிக்கை -Sports Jerseys


29.குடிமைப்பண்புடன் வளரும் தலைமுறை CIVIC


30.ஓடி விளையாடு -திறமைகளை வெளிக்கொணர்வோம் -PLAY


31.e-வாசல் - ஒருங்கிணைந்த மின்னுரு நுழைவாயில் e-VAASAL


Post a Comment

0 Comments