CCK Education News

🛟அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் ( ELECTORAL LITERACY CLUB) அமைக்க உத்தரவு.

🛟அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் ( ELECTORAL LITERACY CLUB) அமைக்க கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.



CCK-CEO-PROCEEDINGS
CCK-CEO-PROCEEDINGS


 அனுப்புநர்

திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா பி.எஸ்.சி.,எம்.ஏ.பி.எட்.,எம்.பில்., முதன்மைக்கல்வி அலுவலர்
கோயம்புத்தூர்-01


பெறுநர்:-

1. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை ). கோயம்புத்தூர்,பொள்ளாச்சி.

2. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி ) கோயம்புத்தூர்,பொள்ளாச்சி.

3. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள் ) கோயம்புத்தூர்.


ந.க.எண்:5407/6/2026 :-19.08.2026


பொருள்:

🛟பள்ளிக்கல்வி கோயம்புத்தூர் மாவட்டம் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் அமைத்தல் விவரங்கள் கோருதல் தொடர்பாக. தேர்தல்


cckkalviseithikal

பார்வை:

கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின் கடிதம் ந.க.எண்.66181/2026/L3 : 14.08.2026.


பார்வையில் காண் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம்( ELECTORAL LITERACY CLUB) அமைக்கப்படவேண்டும் எனவும் தேர்தல் சார்ந்த விழிப்புணர்வுகளை மாணாக்கர்களிடம் தேவையான பரப்புவதற்கு மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை


🛟கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம் ( ELECTORAL LITERACY CLUB) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது, 


நாளது வரை அமைக்கப்படாத பள்ளிகளில் உடன் அமைக்கப்பட வேண்டும் எனவும், மேலும் தங்கள் கட்டுப்பட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பார்வையில் காண் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுறையின் படி தேர்தல் விழிப்புணர்வு மன்றம் ( ELECTORAL LITERACY CLUB) முறையாக செயல்படுவதை கண்காணித்திடவும் தெரிவிக்கப்படுகிறது.


cckkalviseithikal
cckkalviseithikal


மேலும் இப்பொருள் சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள google spreadsheet இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உடன் பதிவிட்டு அதன் கையொப்பமிட்ட இருநகலினை இவ்வலுவலகத்தில் நாளை(20.08.2026) மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைத்திட அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

-முதன்மைக்கல்வி அலுவலர்,

கோயம்புத்தூர்

Post a Comment

0 Comments