CCK Education News

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு.

 🆘2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு. 


முழுமையான விவரங்களுக்கு pdf👇

Click here


CCK-SMC
CCK-SMC


🆘பள்ளிக் கல்வி ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு 2026-2028-பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை

அரசாணை (நிலை) எண். 143

நாள்: 19.08.2026

திருவள்ளுவர் ஆண்டு

பராபவ வருடம், ஆவணி-2

படிக்கப்பட்டவை:-

🆘1. அரசாணை (நிலை) எண்.144, பள்ளிக்கல்வி (அகஇ 2 துறை, நாள் 28.06.2024.

2. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, 55.6.616. 1338/B2/SMC/SS/2026, 23.07.2026.

🆘ஆணை


மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2024-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2024-2026-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை நடத்திட தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளருக்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.

2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், 2026-2028-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளார்

🆘1. பள்ளிக் கல்வியில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கில், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி



cckkalviseithikal

உரிமைச் சட்டம், 2009 (RTE Act, 2009) மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை कीलीक, 2011 (Tamil Nadu RTE Rules, 2011), கல்வி அமைச்சகத்தால் 06.05.2026 அன்று வெளியிடப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான வழிகாட்டுதல்கள் (National Guidelines for School Management Committee) D ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha 20 Framework) வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சமூகப் பங்கேற்பை உறுதிசெய்யும் முக்கிய அமைப்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

🆘ii. சமூக அணிதிரட்டலின் (Community Mobilization) அடித்தளமாக விளங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பள்ளி மேம்பாட்டில் பெற்றோர்கள் மற்றும் பிற பங்காளர்களின் பங்களிப்பை உறுதிசெய்தல் மற்றும் பள்ளிக்கும் சமூகத்திற்குமான உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இக்குழுக்களில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர் பிரதிநிதி, கல்வியாளர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.


🆘iii. இதன்படி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. மேலும், மாவட்டங்களிலுள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள் (NSCBAV மற்றும் KGBV), அரசு ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள் மற்றும் வனத்துறைப் பள்ளிகளில் 2023 ஆம் ஆண்டு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

🆘iv. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற விதியின்படி, 2022-24 மற்றும் 2023.25-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட 2024-26-அரசாணையின்படி, ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும், உண்டு உறைவிடப் பள்ளிகள் (NSCBAV மற்றும் KGBV) உள்ளிட்ட பள்ளிகளில், 15.07.2025 நாளிட்ட மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி, 13.09.2025 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டு செயல்பட்டு வருகிறது.


🆘v. 2022-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026-ஆம் ஆண்டு ஜூலை வரை நடைபெற்ற மொத்தம் 25 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில், சராசரியாக 73.4 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், சராசரியாக 87.1 சதவீத பள்ளிகள் உறுப்பினர்களின் வருகையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் பெற்றோர் செயலி (TNSED Parent App) வாயிலாகப் பதிவு செய்துள்ளன.



🆘vi. பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பிற்கு முன்னதாக நடத்தப்பட்ட பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டங்களில், 2022-ஆம் ஆண்டு 23.2 இலட்சம் பெற்றோர்களும், 2024-ஆம் ஆண்டு 19.8 இலட்சம் பெற்றோர்களும் பங்கேற்றுள்ளனர். இது பள்ளிக் கல்வியில் சமூகப் பங்கேற்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதற்கான சான்றாக அமைகிறது.


🆘vii. மேலும், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் பெற்றோர் செயலி (TNSED Parent App) வாயிலாகப் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரால் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

🆘viii. பதிவேற்றம் செய்யப்படும் பள்ளிகளின் தேவைகளை மாநில அளவில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இதர உயர் அலுவலர்கள் அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாகப் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான ஒருங்கிணைந்த இணையதளத் தகவல் முகப்பு Dashboard) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வழியாக பள்ளிகளின் தேவைகளை ஆய்வு செய்வதோடு, அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிகிறது.


🆘ix. இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைகிறது.


🆘x. எனவே. 29.05.2026 நாளிட்ட அரசு கடிதத்தின்படி, 2026-28-ஆம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கீழ்க்கண்ட கால அட்டவணையின்படி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.


cckkalviseithikal

SMC
CCK SMC



🆘3. மேலும், மாநில திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மேலே பத்தி 20ல் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2026-28-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதியும், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கவும் அரசைக் கோரியுள்ளார்.


🆘4. மாநில திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களின் கருத்துருவினை கவனமாக பரிசீலினை செய்த அரசு அதனை ஏற்று, அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும், 2026-28-ஆம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மேலே பத்தி 2(x)ல் குறிப்பிடப்பட்டுள்ள 560 அட்டவணையின்படி மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.


🆘5. மேலும், இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

சந்தர மோகன், B,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.


Post a Comment

0 Comments