📢ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சமூக நீதித்) துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 67 முக்கிய அறிவிப்புகள்.
சமூக நீதித்துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் விவரம்.👇
Click here
![]() |
| Announcements |
cckkalviseithikal
1 தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்த்தப்படும்.
உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டும், மாணாக்கருக்கு தரமான, சத்தான உணவு வழங்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் பள்ளி விடுதி மாணாக்கருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் 5.1400-សំ இருந்து ரூ.1800 ஆக உயர்த்தியும், கல்லூரி விடுதி மாணாக்கருக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தியும் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக, ஒதுக்கீடு செய்யப்படும். ரூ. 200 கோடி
இதன் மூலம், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கரின் ஊட்டச்சத்து நிலை மற்றும் உடல் நலத்தை மேம்படுத்தி, அவர்கள் கல்வியில் முழுமையான கவனம் செலுத்துவதற்கு உகந்த ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.
2 சமூக நீதி பராமரிப்பு செய்ய தற்போது வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு தொகை உயர்த்தப்படும். விடுதிகளை சிறப்பாக
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் தங்கும் பள்ளி விடுதிகளின் ஆண்டு பராமரிப்பு தொகை 5.50,000-សំ இருந்து அதிகபட்சமாக ரூ.75,000-ஆகவும், கல்லூரி விடுதிகளின் பராமரிப்பு தொகை 5.50,000-សំ இருந்து அதிகபட்சமாக ரூ.1 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.
இதன் மூலம், அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள், அவசரகால சுகாதார வசதிகள் மற்றும் செலவீனங்கள் சீராக மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்படும்.
3 பள்ளிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் வருடாந்திர பராமரிப்பு தொகை மாணாக்கர் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும்.
பள்ளிகளில் சிறுபராமரிப்பு பணிகள் மற்றும் சுத்தமாக பராமரிப்பதற்கு தேவையான பொருள் வாங்குதல் மூலம் பாதுகாப்பான, தூய்மையான கட்டடத்தையும், வளாகத்தையும் பராமரிப்பது உறுதி செய்யப்படும். இத்திட்டத்திற்காக, ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கருக்கு 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இதன் மூலம், மாணாக்கருக்கு பாதுகாப்பான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடச் சூழலை உருவாக்கி, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் நலனுக்கும், வலுவான அடித்தளம் அமைக்கப்படும்.
5 சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.
ஆதிதிராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை கண்டறிந்து, அம்மக்களின் சமுதாய நிகழ்வுகளை மேற்கொள்ள ஏதுவாக 100 சமுதாயக்கூடங்கள் கட்டப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிட மக்கள் சமூக நிகழ்வுகளை வசதியான சூழலில் பாதுகாப்பான, மற்றும் கண்ணியமான நடத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
6 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியினை நிர்வகிக்கவும், மாணாக்கரின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அரண் விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு" உருவாக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளின் நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் மாணாக்கர் நலனை ஒருங்கிணைந்த " அரண் பராமரிப்பு மேலாண்மை உருவாக்கப்படும். மேம்படுத்த விடுதி அமைப்பு"
இதன் மூலம், அனைத்து விடுதிகளிலும் தரமான நிர்வாகம், வெளிப்படையான கண்காணிப்பு, விரைவான குறைதீர் மற்றும் மாணாக்கர் நலச்சேவைகளை உறுதி செய்து, மாணாக்கருக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடச் சூழலை உருவாக்க வழிவகை செய்யப்படும்.
7 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு "அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது" வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கரின் மேம்பாட்டிற்காக சிறப்பாக பணிபுரிந்து வரும் பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு " அறிவொளி ஆசிரியர் விருது" வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கரின் மேம்பாட்டிற்காக சிறப்பாக பணிபுரிந்து வரும் விடுதி காப்பாளர்களை ஊக்குவிக்க காப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் " அறிவொளி காப்பாளர் விருது" வழங்கப்படும்.
இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். நடைமுறைகள்
8 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோயம்புத்தூரில் வணிக மையம் கட்டப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், உரிய வாய்ப்புகளை உருவாக்கவும் கோயம்புத்தூரில் வணிக மையம் கட்டப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்தி, அவர்களின் வருமானத்தை உயர்த்துவதுடன், வருவாயையும் பெருக்க முடியும்.
9 சென்னை நந்தனத்தில் "பழங்குடியினர் பண்பாட்டு மையம்" அமைக்கப்படும்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் (Tribal Research Centre) பணிகளை சென்னை மாநகருக்கும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் "பழங்குடியினர் பண்பாட்டு மையம்" (Tribal Cultural Centre) அமைக்கப்படும்.
இதன் மூலம், பழங்குடியின மக்களின் பன்முகப் பண்பாடு, கலை மரபுகளைப் பாதுகாப்பதுடன் அவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் "அம்பேத்கர் படிப்பகம்" ஏற்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் " அம்பேத்கர் படிப்பகம்" ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம், விடுதி மாணாக்கரிடையே வாசிப்புப் பழக்கம், அறிவுத் தேடல், 12/70 மற்றும் அறிவாற்றலை வளர்த்து, மற்றும் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கான கற்றல் சூழல் உருவாக்கப்படும்.
இப்படிப்பகத்தில், போட்டித்தேர்வு புத்தகங்கள், உயர் கல்வி படிப்பிற்கான புத்தகங்கள், வாழ்வியல் நெறி தொடர்புடைய புத்தகங்கள் இடம்பெறுவதுடன் அவை இணைய வழியாகவும் கற்க வசதி ஏற்படுத்தப்படும்.
11 ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக "சமூக நீதி நல வாரியம்" அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்கவும், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், தனித்துவமான நல அமைப்பாக "சமூக நீதி நல வாரியம்" அமைக்கப்படும்.
இதன் மூலம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆதிதிராவிடர் மக்களுக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவித் தொகைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ இயலும்.
cckkalviseithikal
12 சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் 23 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் தரமான பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து பயிலவும், இடைநிற்றலைக் குறைத்து, உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவது அவசியமாகும். அதன் அடிப்படையில், இந்த ஆண்டு 23 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
இதன் மூலம், மாணாக்கருக்கு தரமான மற்றும் தொடர்ச்சியான பள்ளிக் கல்வியை உறுதி செய்து, இடைநிற்றலைத் தடுத்து, உயர்கல்விக்கான அடித்தளத்தை வலுப்படுத்தி, அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வழிவகை செய்யப்படும்.
13 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு உதவும் வகையில் "சமூக நீதி அறக்கட்டளை" உருவாக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக உதவுவதற்காக " சமூக நீதி அறக்கட்டளை" உருவாக்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக உதவ முன்வரும் நிறுவனங்கள், தனிநபர்கள் மூலம் பெறப்படும் நிதி ஆதாரங்கள், சேவைகள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் போன்ற உதவிகளை ஒருங்கிணைத்து உரிய வகையில் செயல்படுத்த ஏதுவாக இந்த சமூக நீதி அறக்கட்டளை உருவாக்கப்படும்.
14 பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக "விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்" செயல்படுத்தப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களின், தொழில் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை அடையாளம் கண்டு, வருமானம் ஈட்டக்கூடிய தொழில் நடவடிக்கைகளை தொடங்குவதற்குத் தேவையான நிதியுதவி, தொழில்நுட்ப வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த "விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதார திட்டம்" உருவாக்கப்படும்.
cckkalviseithikal
15 தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க " அகம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
தூய்மைப் வாழ்விடங்களின் பணியாளர்கள், நமது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முக்கியப் பணியாளர்களாவர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான, பாதுகாப்பான குடியிருப்பை உறுதி செய்யும் வகையில், வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க "அகம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
இதன் மூலம், பணியாளர்களுக்கும், தூய்மைப் அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்விடத்தை உறுதி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்படும்.
16 பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித் தொகை செயல்படுத்தப்படும். திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள வேறுபாட்டை களைந்து, சமமாக உயர்த்தி வழங்கப்படும். மொத்த கூடுதல் செலவினத்தை மாநில அரசே இத்திட்டத்திற்குத் தேவையான ஏற்றுக்கொள்ளும்.
இதன் மூலம், பழங்குடியின மாணாக்கரின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரித்து, உயர்கல்விக்கான சம வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
17 ஆதிதிராவிட விவசாயிகள் மேம்பாட்டிற்காக " வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்" உருவாக்கப்படும்.
ஆதிதிராவிட விவசாயிகள் உற்பத்தியை பெருக்க ஏதுவாக, 90 சதவீதம் மானியத்துடன் கூடிய விரைவு மின் இணைப்பு வழங்கும் "வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
இதன் மூலம், விவசாயிகள் பாசன வசதி, உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்தி, பொருளாதார மேம்பாடு அடைவார்கள்.
18 வீடற்ற பழங்குடியினருக்கு " உறையுள்" பழங்குடியினர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
வீடற்ற பழங்குடியினருக்கு 2000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் "உறையுள்"-பழங்குடியினர் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம், பழங்குடியின மக்கள் பாதுகாப்பான குடியிருப்பு வசதியைப் பெற்று, கண்ணியத்துடன் வாழ்வதுடன், வாழ்க்கைத் தரம் மேம்படவும் வழிவகை செய்யப்படும்.
19 " சீர்மிகு பள்ளிகள்" திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் சுத்தமான, சுகாதாரமான தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக மேம்படுத்தப்படும்.
"சீர்மிகு பள்ளிகள்" திட்டத்தின் மூலம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்புடன் கூடிய வளாகங்களாக பள்ளிகள் மேம்படுத்தப்படும். மேலும், தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், பள்ளி வளாகங்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இதன் மூலம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வளாகத்தினை சீராக பராமரிப்பதுடன், கல்வி கற்பதற்கான சிறந்த கற்றல் சூழல் உருவாக்கப்படும்.
20 வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு "இனிய இல்லம்" குடியிருப்புத் செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர் திட்டம்
வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்கள் தகுதியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 5,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
இதன் மூலம், வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு, பாதுகாப்பான வாழ்விடத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் பாதுகாப்பையும் தரத்தையும் சமூகப் உயர்த்தி, கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய வழிவகை செய்யப்படும்.
20
23/70
21 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு 100 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு ரூ.30 கோடி செலவில் 100 புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்படும்.
இதன் மூலம், மாணாக்கருக்கு தரமான கல்வி கற்க உகந்த சூழலை உருவாக்கி, கல்வித் தரத்தையும் கற்றல் அனுபவத்தையும் மேம்படுத்த முடியும்.
22 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் மாணாக்கரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைப்படும் இடங்களில் கூடுதல் கழிப்பறைகள் முறையான பராமரிப்பு வழிமுறைகளுடன் அமைக்கப்படும்.
இதன் மூலம், மாணாக்கருக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான, கண்ணியமான சூழலை உறுதி செய்வதுடன், கழிப்பறைகளின் தொடர்ச்சியான பராமரிப்பும் உறுதி செய்யப்படும்.
cckkalviseithikal
23 தூய்மைப்பணியாளரின் உறுப்பினர்களை முனைவோராக குடும்ப தொழில் மாற்றுவதற்கு "ஏற்றம்" - தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
தூய்மைப்பணியாளரின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு "ஏற்றம்" - தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, வங்கி கடனுடன் 20 சதவீத மானிய உதவி வழங்கப்படும்.
இதன் மூலம், விடுதி மாணாக்கரின் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையான பயிற்சியின் மூலம் மேம்படுத்தி, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கும் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்க வழிவகை செய்யப்படும்.
30 புதிய இளைஞர்களை விளையாட்டுகளில் ஊக்குவிக்கும் பொருட்டு "சிகரம் - சிறப்பு விளையாட்டு திறன் மேம்பாட்டு அறிமுகப்படுத்தப்படும். திட்டம்"
இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், குதிரையேற்றம் (Equestrian), (Rowing), மற்றும் காற்றலைச் சறுக்கு விளையாட்டு (Wind surfing) ஆகிய பயிற்சிகள் சென்னை, இராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் கோவளம் ஆகிய இடங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கும் " சிகரம் சிறப்பு விளையாட்டு திறன் மேம்பாட்டு திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம், இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை உயர்நிலைத் திறன்களாக வளர்க்க இயலும்.
31 சீருடைப் இளைஞர்களை பணித் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் இலக்கு சீருடைப்பணி தேர்வு பயிற்சி அறிமுகப்படுத்தப்படும். திட்டம்"
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இராணுவம் மற்றும் காவல் துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு இளைஞர்களை தயார் செய்யும் வகையில் " இலக்கு சீருடைப்பணி தேர்வு பயிற்சித் திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
குறிப்பாக, தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தரமான போட்டித் தேர்வு மற்றும் உடற்தகுதிப் பயிற்சியை அவர்களின் வாழ்விடத்திற்கு அருகிலேயே வழங்கி, சீருடைப் பணிகளில் அவர்களின் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க இயலும்.
32 சமூகநீதி துறையின் திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைத்து "ஒருங்கிணைந்த மின் ஆளுமை திட்டம்" உருவாக்கப்படும்.
ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ (TAHDCO) ஆகியவற்றின் திட்டங்கள், கல்வி நிலையங்கள், விடுதிகள், உட்கட்டமைப்பு முன்னேற்றம் மற்றும் பயனாளிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்க "ஒருங்கிணைந்த மின் ஆளுமை திட்டம்"
இதன் மூலம், அரசின் நலத்திட்டங்கள் வெளிப்படையாகவும், திறம்படவும், உரிய காலத்திலும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்து, ஒதுக்கப்படும் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதையும், திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
33 பழங்குடியின வாழ்விட இயற்கை சூழலை கண்டு களிக்க "பூம்பொழில் -தங்கும் வசதிகள்" ஏற்படுத்தப்படும்.
மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு " பூம்பொழில் ஏற்படுத்தப்படும். உகந்த தங்கும் வசதிகள்" மேலும், உள்ளுர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்.
இதன் மூலம், பழங்குடியின இளைஞர்களுக்கு உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி, பழங்குடியின குடும்பங்களின் வருமானத்தை உயர்த்த வழிவகை செய்யப்படும்.
34 தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர் வேலை மற்றும் பழங்குடியினரின் வாய்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு "சரிநிகர் சம வேலை வாய்ப்பு திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
வேலை தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாய்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு, அதிக பணியாளர்களை பணி அமர்த்தும் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் "சரிநிகர் சம வேலைவாய்ப்பு திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தனியார் துறையில் அதிக வேலை பெற வாய்ப்பாக அமையும்.
35 விடுதி மாணாக்கரின் விளையாட்டு மற்றும் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறகுகள்" பல்திறன் குழுக்கள் உருவாக்கப்படும்.
பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கரின் கவனச் விளையாட்டு சிதறலை தவிர்க்கவும், மற்றும் கலைத்திறனை ஊக்குவிக்கவும் அனைத்து விடுதிகளிலும் " சிறகுகள்" பல்திறன் குழுக்கள் உருவாக்கப்படும்.
37 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் விளைபொருட்களின் தனித்தன்மையை நடவடிக்கை பேணிப் பாதுகாக்கும் பொருட்டு புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதுடன், அவற்றின் சந்தை மதிப்பையும், உற்பத்தியாளர்களின் வருமானத்தையும் உயர்த்த முடியும்.
38 பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான, சத்தான உணவு வழங்கும் வகையில் 250 பழங்குடியின குடியிருப்புகளில் சிறப்பு அங்கன்வாடி மையங்கள் புதியதாக அமைக்கப்படும்.
பழங்குடியின குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்கவும், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகே வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250 இடங்களில் Ethno medicine) அறிவை ஆவணப்படுத்தவும், மருத்துவத் தாவரங்களை சேகரித்து விற்பனை செய்து வரும் பழங்குடியின குடும்பங்களுக்கு நிலையான சந்தை ஏற்படுத்தித்தர பழங்குடியின இணைப்பை மரபுவழி மூலிகை மருத்துவ பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறப்பு அங்கன்வாடி மையங்கள்" உருவாக்கப்படும். இவை பழங்குடியினரால் நிர்வகிக்கப்படும். இம்மையத்திற்கான உட்கட்டமைப்பு மற்றும் உரிய பயிற்சி அரசால் வழங்கப்படும்.
இதன் மூலம், பழங்குடியின குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
cckkalviseithikal
39 பழங்குடியின மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு "தடம் -பழங்குடியினர் மரபு நடை" (TN Tribal Trails Thadam) என்ற கலாச்சார பயண நிகழ்ச்சி நடத்தப்படும்.
பழங்குடியின மக்களின் பண்பாடு, மற்றும் கலாச்சாரம் வாழ்க்கை நடைமுறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, "தடம் பழங்குடியினர் மரபு நடை" எனும் கலாச்சார பயண நிகழ்ச்சியை ஐந்து மாவட்டங்களில் ஏற்படுத்துவதன் மூலம், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இந்த மரபு நடை பயண நிகழ்ச்சியை செயல்படுத்த ஏதுவாக இதில் ஈடுபடும் பழங்குடியின மக்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம், பழங்குடியின மக்களின் மரபு அறிவு மற்றும் கலாச்சாரத்திற்கு பொருளாதார மதிப்பை உருவாக்கி, உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
40 இயற்கை முறை விவசாயத்தை கடைப்பிடிக்கும் பழங்குடியின விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு "மண்வளம் பழங்குடியின அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.
இயற்கை முறை விவசாயத்தை கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு அவர்களின் விளை பழங்குடியின பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்தி, விற்பனையினை பெருக்க இயற்கை முறை விவசாய சான்றிதழ் வழங்கும் "மண்வளம் பழங்குடியின அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், பழங்குடியின விவசாயிகளின் விளை பொருட்களின் தரத்தையும், சந்தை மதிப்பையும் உயர்த்தி, விற்பனை மற்றும் வருமானத்தைப் பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
41 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் விடுதி வளாகத்தில் "பசுமைத் தோட்டம்" உருவாக்கப்படும்.
மாணாக்கருக்கு இயற்கை மீதான ஈடுபாட்டினை அதிகரிக்க, அவர்களின் பங்களிப்புடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் விடுதிகளின் வளாகங்களில் " பசுமைத் தோட்டம்" உருவாக்கப்படும்.
இதன் மூலம் மாணாக்கரிடையே இயற்கை நேசம், சுற்றுச் சூழல் பொறுப்பு, விவசாய உற்பத்தி முறைகள் போன்றவற்றில் ஆர்வமுள்ள தலைமுறையை உருவாக்க முடியும்.
42 பழங்குடியினர் பெண்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் சோலார் அடுப்புகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பழங்குடியின மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வண்ணம் சூரிய ஆற்றல் மூலம் சோலார் அடுப்புகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம், சூரிய ஆற்றலை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மின்சாரத்தை தயாரிக்க குடியிருப்புகளில் சூரிய மின்தகடுகள் நிறுவப்படும்.
43 விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கருக்கு வேலை வாய்ப்புத் திறனை வளர்க்க " வெற்றிப் பாதை-திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கரின் திறன் மேம்பாடு, இணையதள பயன்பாடு, தலைமைத்துவ பண்பு மற்றும் வேலை வாய்ப்புத் திறனை வளர்க்க "வெற்றிப்பாதை- திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்" அறிமுகப்படுத்தப்படும். இதற்காக அனைத்து விடுதிகளிலும் வெற்றி திறன் 6 (Skill Centers ) உருவாக்கப்படும்.
இதன் மூலம், மாணாக்கருக்கு கல்வியிலிருந்து தொழில் வாழ்க்கைக்கான வெற்றிகரமான பாதையை அமைக்க இயலும்.
44 நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் பழங்குடியின "மரபுவழி மூலிகை மருத்துவ பாதுகாப்பு திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்பட்டு
45 பழங்குடியின விளை பொருட்களுக்கு " முல்லை" என்றதனித்த அடையாளத்துடன் கூடிய மதிப்பு என்ற கூட்டல் அலகுகள் நிறுவப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் அறுவடை செய்யும் விவசாயப் பொருட்கள் மற்றும் சேகரிக்கும் சிறுவனப் பொருட்களை (புளி, கடுக்காய், தேன், கிழங்குகள் போன்றவை) மதிப்பு கூட்டுதல் மேற்கொள்ள 25 மதிப்பு (Value Addition Units) ரூ.12.50 கோடி மதிப்பில் நிறுவப்படும்.
இதன் மூலம், பழங்குடியின விளை பொருட்கள் 'முல்லை' என்ற தனித்த அடையாளத்துடன் (Brand) சந்தைப் படுத்தப்படும்.
46 பழங்குடியின மக்களின் சிறுதானிய விதைகளை ஆவணப்படுத்துவதற்கான " மரபு விதை பாதுகாப்பு திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியின மக்கள் பின்பற்றி வரும் வேளாண் முறைகள் மற்றும் திணை, சாமை, குதிரைவாலி, வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானிய வகைகள் அடங்கிய நாட்டு விதை வகைகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதற்காக "மரபு விதை பாதுகாப்பு திட்டம்" உருவாக்கப்படும்.
இதன் மூலம், தமிழ்நாட்டின் பழங்குடியினரின் பாரம்பரிய வேளாண் அறிவு மற்றும் மரபுசார் விதை வளங்களைப் பாதுகாக்க முடியும்.
47 சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் " பழங்குடியினர் வளமையம்" உருவாக்கப்படும்.
ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் பழங்குடியினர் (ITDP) செயல்படுத்தப்படும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்டங்களில், பழங்குடியின மக்களுக்காக திறன் மேம்பாட்டு மையம், மற்றும் கல்வி, வாழ்வாதார ஆலோசனை மையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து "பழங்குடியினர் வளமையம்" (Tribal Resource Centre) அமைக்கப்படும்.
இம்மையங்கள் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் நிர்வாக அமைப்பின் கீழ் செயல்படும்.
48 வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னாள் மாணாக்கரால் (Alumni Connect) வழிகாட்டல் வழங்கும் " அறிவுப் பாலம் அறிமுகப்படுத்தப்படும். திட்டம்"
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் விடுதிகளில் பயின்ற முன்னாள் மாணாக்கருக்கும், தற்போதைய மாணாக்கருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தி, மாணாக்கரின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் மாணாக்கரால் முன்னாள் வழிகாட்டல் வழங்கும் "அறிவுப் பாலம் திட்டம்" செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், தலைமுறைகளுக்கு இடையேயான அறிவுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பு மாணாக்கரின் மற்றும் கல்வி, தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான வலுவான வழிகாட்டுதல் அமைப்பு உருவாக்கப்படும்.
49 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், வேளாண் தொழில் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் " உழவர் உற்பத்தி நிறுவனம்" உருவாக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், வேளாண் தொழில் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் " உழவர் உற்பத்தி நிறுவனம்" (Farmer Producer Organizations FPOs) உருவாக்கப்படும். மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் உழவர் உற்பத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை உழவர் உற்பத்தி ஒருங்கிணைக்கப்படும். நிறுவனங்களுடன்
இதன் உற்பத்தியை மூலம், விவசாயிகளின் ஒருங்கிணைத்து, மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை பெற்றுத் தருவதற்கு உதவி புரியும்.
50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில், " சிறப்பு கூட்டுறவு உருவாக்கப்படும். சங்கங்கள்"
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றம், சேமிப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள "சிறப்பு பொருளாதார கூட்டுறவு சங்கங்கள்" உருவாக்கப்படும். மேலும், உற்பத்தி மற்றும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழில் முனைவோர் வழிகாட்டுதல் மற்றும் சந்தை இணைப்புகள் ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உற்பத்தியாளர்களாகவும், மக்களை தொழில் முனைவோராகவும் உயர்த்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி புரியும்.
51 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் பொருட்டு திறனாய்வு மேற்கொண்டு உரிய பயிற்சியுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் "வெற்றிப்படி திட்டம்" குறிப்பாக தென் மாவட்டங்களில் செயல் படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்து, அவர்களை தொழில் உலகிற்குத் தயார்படுத்தும் வகையில் " வெற்றிப்படி திட்டம்" செயல்படுத்தப்படும். இளைஞர்களின் கல்வித் தகுதி, ஆர்வம் மற்றும் 53/70 வேலைவாயப்பு விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகள், தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் பணியிடப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இத்திட்டம் தென்மாவட்டங்களில் குறிப்பாக, வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்படும்.
52 விடுதி மாணாக்கருக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அளிக்க கல்லூரி மாணாக்கர் விடுதியில் "தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆளுமை மையம்" உருவாக்கப்படும்.
தொடர்புத் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணாக்கர் விடுதிகளில், மாணாக்கரின் தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் போட்டித்திறனை உயர்த்தும் வகையில், ICT-Academy உடன் இணைந்து சிறப்பு "தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஆளுமை மையம்" உருவாக்கப்படும்.
இம்மையங்கள் மூலம், தகவல் தொழில்நுட்பம், கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் கருவிகள், இணையவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.
cckkalviseithikal
53 பழங்குடியினர் நலனுக்காக தமிழ்நாடு பழங்குடியினர் நிதி மேம்பாட்டுக் குழுமம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், "தமிழ்நாடு பழங்குடியினர் நிதி மேம்பாட்டுக் குழுமம்" உருவாக்கப்படும்.
இக்குழுமத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு சுயதொழில், தொழில் முனைவு, திறன் மேம்பாடு, வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கு தேவையான நிதி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
54 தூய்மைப் பணியாளர் நலனுக்காக தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நிதி மேம்பாட்டுக் குழுமம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், தொழில் முனைவோர் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், "தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நிதி மேம்பாட்டுக் குழுமம்" உருவாக்கப்படும்.
இக்குழுமத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்கள் அவர்களது மற்றும் குடும்பத்தினரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் தொடங்குவதற்கான நிதியுதவி, தொழில் முனைவோர் பயிற்சி, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கப்படும்.
55 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும்.
வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை எதிர்காலத் தொழில்நுட்ப உலகிற்குத் தயார்படுத்தி, வேலைவாய்ப்பினை பெறுவதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவி புரியும்.
56 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க " திட்ட கண்காணிப்பு அலகு" உருவாக்கப்படும்.
ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மற்றும் மேம்பாட்டுச் செயல்திட்டத்தை திறம்பட செயல்படுத்துதல், ஒருங்கிணைத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்காக "திட்ட கண்காணிப்பு அலகு" உருவாக்கப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உரிய காலத்தில் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்து, மேம்பாட்டுச் செயல் திட்டத்தின் மேம்படுத்தப்படும். செயல்திறன்
57 வணிகத்துறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பங்கேற்பினை அதிகரிக்க " வணிக வாயில் தொழில்முனைவு வாய்ப்புத் திட்டம்" செயல்படுத்தப்படும்.
தொழிற்பேட்டைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வணிக நிறுவனங்களில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு விகிதாச்சார அடிப்படையில் உரிய ஒதுக்கீடு வழங்கிடும் வகையில் "வணிக வாயில் தொழில் முனைவு வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் "
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர், தொழில் மற்றும் வணிகத் துறைகளில் அதிகளவில் பங்கேற்று, நிலையான வருமானம் ஈட்ட முடியும்.
58 பழங்குடியினர் நலனுக்காக பழங்குடியின மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களில் "பழங்குடியினர் நலக்குழு" உருவாக்கப்படும்.
பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் "பழங்குடியினர் நலக்குழு" உருவாக்கப்படும்
இதன் மூலம், பழங்குடியின மக்களின் குரல் நேரடியாக அரசின் கொள்கை மற்றும் திட்டமிடலில் பிரதிபலிக்கவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தவும் முடியும்.
59 தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளையும், தேவைகள் 60/70 நிவர்த்தி செய்ய ஏதுவாக தூய்மைப் பணியாளர் நலக்குழு உருவாக்கப்படும்.
தூய்மைப் கோரிக்கைகளையும், பணியாளர்களின் தேவைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உதவும் வகையில் மாவட்டம் தோறும் " தூய்மைப் பணியாளர் நலக்குழு" உருவாக்கப்படும்.
இதன் மூலம், தூய்மைப் பணியாளர்களின் குரல் நிர்வாகத்திலும் கொள்கை முடிவுகளிலும் உரிய முறையில் பிரதிபலிக்கவும், அவர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை சிறப்பாக வடிவமைத்து செயல்படுத்தப்படும்.
cckkalviseithikal
60 வணிக வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கடன் வசதி எளிதில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் தொழில் முனைவோருக்கான கடன்கள் வழங்க தாட்கோ மூலம் வணிக வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு கடன் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை முனைவோராகவும், உருவாக்குபவர்களாகவும் சொழில் . 62/70 உயர்த்தி, அவர்களின் குடும்ப வருமானத்தையும் உயர்த்த முடியும்.
61 பழங்குடியினர் மொழிகள் குறித்த சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும்.
பழங்குடியின மொழிகள் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணாக்கரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும்.
இதன் மொழிகளின் மூலம், பழங்குடியின தொன்மை மற்றும் தனித்துவத்தைப் பரவலாக்கம் செய்து, மொழிப் பாதுகாப்பில் தலைமுறையினரின் இளம் பங்களிப்பை அதிகரித்து, அழிந்து வரும் மொழியியல் மரபுகளை அடுத்த கொண்டு செல்லப்படும். தலைமுறைக்குக்
62 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை ஊக்குவிக்க "கலைப்பட்டறை" மூலம் கலைத்திறனில் நவீன கலைத் திறன் பயிற்சி வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை இலக்கியம், இசை, நாடகம், நடனம் மற்றும் பலதரப்பட்ட திரைப்படக்கலைத் துறைகளில் சிறந்து விளங்க உரிய பயிற்சி அளிக்கவும், கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் " கலைப்பட்டறை" மூலம் நவீன கலைத் திறன் பயிற்சி வழங்கப்படும்.
இதன் மூலம், இளைஞர்களின் கலைத் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு கலைத்துறையில் உயர்கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய பாதைகளை அமைத்து, மரபு கலை மற்றும் பண்பாட்டு மரபுகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல உதவும்.
63 ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் " ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை ஊடகத் துறையில் ஊக்குவித்து, அவர்களின் திறன்களையும் பங்கேற்பையும் மேம்படுத்தும் வகையில், ஊடகத்துறை படிப்புகளான இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் பயிலும் ( 2 (Internship) உதவித்தொகை வழங்கும் " ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.
இதன் மூலம், மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறைப் பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக்கொண்டு, ஊடகத்துறையில் சிறந்து விளங்க முடியும்.
64 ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு புத்துணர்வு பயிற்சி செயல்படுத்தப்படும். திட்டம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு கற்பித்தல் அணுகுமுறை, ஆளுமைத் திறன், ஒழுக்க மற்றும் நெறிமுறைகள் தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து புதுப்பித்து, மாணாக்கரின் மாறிவரும் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப, நவீன கற்பித்தல் முறைகள், புதிய கல்வி நுட்பங்கள் மற்றும் புதுமையான கற்றல் அணுகுமுறைகளை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், "பள்ளி ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு புத்துணர்வு செயல்படுத்தப்படும். பயிற்சி திட்டம்"
இதன் மூலம், மாணாக்கரின் கற்றலின் தரத்தை உயர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கருக்கு நவீன, தரமான மற்றும் எதிர்காலத்திற்கு தேவையான கல்வியினை வழங்க இயலும்.
65 சமூக நீதி விடுதிகளில் சுகாதாரமான வளாகத்தினை உருவாக்கும் நோக்குடன் கொசு வலை அமைக்கப்படும்.
சமூக நீதி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கரின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான வாழ்விடச் சூழலை உறுதி செய்யும் வகையில், கொசு வலை அமைக்கப்படும்.
இதன் கீழ், அனைத்து விடுதிகளிலும் தரமான கொசுவலைகள் பொருத்தப்பட்டு, கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து மாணாக்கரைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான வாழ்விடச் சூழலை உருவாக்கவும் இயலும்.
cckkalviseithikal
66 சமூக நீதி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்படும்.
சமூக நீதி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கரின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்யும் நோக்கில், இன்வெர்ட்டர் (Inverter), மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் (Water Purifiers) அமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம், மின்தடை ஏற்படும் நேர்வுகளில் மாணாக்கரின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதுடன், பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் வசதியும் உறுதி செய்யப்படும்.
67 சமூக நீதி விடுதி மாணாக்கருக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி மற்றும் பயிற்சி பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
சமூக நீதி விடுதியில் தங்கிப் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கருக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி மற்றும் பயிற்சி பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
இது மாணாக்கரின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தி, உயர்கல்வி, போட்டித் தேர்வுகள் மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு அடித்தளமாக அமையும்.

0 Comments