💥 6 நாட்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பை (HLB) முடித்த ஆசிரியர்!! அதிகாரிகள் பாராட்டு!!
💥மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டு வசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் கடந்த ஆகஸ்ட் 1 தொடங்கி நடந்து வருகிறது.
![]() |
| CCK Census |
💥ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பை நடத்தி 33 கேள்விகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி, இந்தப் பணியானது மேற்கொள்ளப்படும்.
💥இந்தநிலையில் ஆகஸ்ட் முதல் துவங்கி வரை முடியும் இந்த பணியை ஆசிரியர் ஒருவர் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில் தீவிரமாக பணியாற்றி 6 நாட்களில் முடித்துள்ளார். இது அதிகாரிகள் மட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
💥இதில் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அசோக். இவருக்கு முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகம் பகுதிக்கு உட்பட்ட நமசிக்காடு பகுதியில் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப்பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
💥அன்று முதல் தொடர்ச்சியாகச் செயல்பட்டு பணியை நேற்று நிறைவு செய்து அதற்கான கோப்புகளை முத்துப்பேட்டை தாசில்தார் பிரேமாவிடம் ஒப்படைத்தார்.
![]() |
| cckkalviseithikal |
💥இதனை கண்டு ஆச்சரியமடைந்த தாசில்தார் பிரேமா ஆசிரியர் அசோக்கிற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்


0 Comments