CCK Education News

✍️மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், அனுமதி சார்ந்து மாவட்ட கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்கள்.

✍️மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், அனுமதி சார்ந்து மாவட்ட கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்கள்.


CCK DEO (E) Order



கோயம்புத்துர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்


ந.க.எண். 001801 /ஆ5/2026

நாள்:10.08.2026

ஆடி 25

திருவள்ளுவராண்டு 2057

பொருள்:

கோயம்புத்தூர் கல்வி மாவட்டம் - தொடக்கக் கல்வி- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - கோயம்புத்தூர் மாவட்டம் முதல் கட்ட வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் (HLO) மேற்கொள்ளுதல் - தொடர்பாக


பார்வை:


1.முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின் கடித எண் ந.க.எண். 3721211/2025/இ7 நாள் 13.05.2026 2.கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் தொலை பேசி செய்தி நாள் 09.08.2026


cckkalviseithikal

மேற்காண் பார்வை (1)-இல் காணும் செயல்முறைகளின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகத்தின் கீழ் செயல்படும் 8 ஒன்றியங்களின் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்கான (HLO) ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான ஆணை பெறப்பட்ட ஆசிரியர்கள் சிலர்பணியில் ஈடுபடாமல் உள்ளனர் எனத் தெரியவருகிறது. எனவே, எவ்வித சுணக்கம் இல்லாமல் இப்பணியினை மேற்கொள்ள தெரிவித்து கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைக்கிணங்க மாவட்டக் கல்வி அலுவலருக்கு தொலைப் பேசியில் தெரிவித்துள்ளார்கள். எனவே. 

cckkalviseithikal
cckkalviseithikal 


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகத்தின் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்கின்றார்களா என்று ஆய்வு செய்து முற்பகல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் பிற்பகலும், பிற்பகல் செல்லும் ஆசிரியர்கள் முற்பகலும் ஒவ்வொரு நாளும் காலதாமதமின்றி பள்ளிப் பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிக்கு செல்ல அறிவறுத்தப்பட வேண்டுமென அனைத்து வட்டாரக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலர்,

(தொடக்கக் கல்வி),

கோயம்புத்தூர்

Post a Comment

0 Comments