🎯சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (STET) வழக்கு மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த விவரம்.👇
![]() |
| STET |
வழக்கு விவரம் 👇
🎯பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வில் (STET) கருணை மதிப்பெண்கள் (Grace Mark) வழங்க வேண்டும்.
🎯பொதுப் பிரிவினருக்கு (OC) தேர்ச்சி மதிப்பெண்ணை 90-லிருந்து 75 ஆகக் குறைக்க வேண்டும்.
🎯சிறப்புத் தகுதித் தேர்வில் (STET) அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்ணை 60 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்;
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட எந்த சலுகையும் வழங்க இயலாது. அவ்வாறு சலுகைகள் வழங்கினால் தேர்வின் தரம் குறைந்து விடும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேற்கண்ட சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் 2026 செப்டம்பர் 11 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்பட்டால் அடுத்த வாரத்தில் சிறப்பு தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments