CCK Education News

🛟மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கட்டாய இடமாறுதல் அளிக்க உத்தரவு

🛟மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கட்டாய இடமாறுதல் அளிக்க உத்தரவு.


Transfer-Counseling
Transfer-Counseling


பள்ளிக்கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல், விருப்பு மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு – EMIS மூலம் நடத்த உத்தரவு

விவரம் pdf👇 

Click here

சென்னை – 18.09.2026

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்பு மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வை EMIS இணையதளம் மூலம் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை – 06, நாள் 18.09.2026 விவரம் 👇 


அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் EMIS-ல் பதிவு செயதல்

ஒரே அலுவலகத்தில் / பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்பு மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு ஆகியவை EMIS இணையதளம் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து அலுவலகப் பணியாளர்களின் விவரங்களையும் EMIS இணையதளத்தில் ஆய்வு செய்து, சரியாகப் பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


EMIS பதிவுகளில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும்

EMIS இணையதளத்தில் பணியாளர்களின் விவரங்களை ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் (Shortfall entries) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, EMIS இணையதளத்தில் பணியாளர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பணியாளர் சார்ந்த பதிவுகள் EMIS இணையதளத்தில் இல்லையெனில், புதிய உள்ளீடுகள் (Fresh Entries) பதிவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு தவறான விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றை உரிய முறையில் திருத்தம் செய்ய வேண்டும்.


25.09.2026க்குள் பணிகளை முடிக்க உத்தரவு

அலுவலகப் பணியாளர்களின் மாறுதல், பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வுகள் EMIS இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளதால், அனைத்து பதிவுகளையும் சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


எனவே, மேற்கண்ட பணிகளை 25.09.2026க்குள் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முதல் இளநிலை உதவியாளர் வரையிலான பணியாளர்களின் எண்ணிக்கையையும், EMIS இணையதளத்தில் பதியப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையையும் சரிபார்த்து, இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருப்பின் அதனை சரிசெய்து, 25.09.2026க்குள் விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இணைப்பு


உரிய வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.


முக்கிய குறிப்பு:

EMIS இணையதளத்தில் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் சரியாகவும் முழுமையாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.


👉 cckkalviseithikal & cckeducationnews கல்வித்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் செய்திகளுக்கு தொடர்ந்து பார்வையிடுங்கள்.

Post a Comment

0 Comments