CCK Education News

🎤இன்று 17.09.2026 பள்ளிகளில் எடுக்க வேண்டிய சமூக நீதி நாள் உறுதிமொழி.

 🎤இன்று 17.09.2026 பள்ளிகளில் எடுக்க வேண்டிய சமூக நீதி நாள் உறுதிமொழி. 


Pledge
Pledge


பெரியாரின் பிறந்தநாளான இன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 

அனைத்து பள்ளிகளிலும் சமூக நீதி உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக நீதி நாள் உறுதி மொழி


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!


சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!


சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!


மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.


சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்!

Post a Comment

0 Comments