CCK Education News

⚡NHIS இல் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் புகைப்படங்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகள்

⚡NHIS இல் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் புகைப்படங்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகள். 


CCK-NHIS
CCK-NHIS


⚡களஞ்சியம் செயலியில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது.


NHIS - Family

member update

Enhancement


⚡தற்போது களஞ்சியம் App இல் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


1. களஞ்சியம் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

Update செய்ய

Click here

2. பின்னர் Update Profile பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும்.

 

3. இதில் Family Members details என்பதனை அழுத்தி உள் சொல்லவும்.


4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும். 


5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும்.


6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது,


7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும் 


8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரைச் சேர்க்கலாம்.


9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும்.

 நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும் தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம்.


இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Post a Comment

0 Comments