CCK Education News

🛑அலுவலகப் பணியாளர்கள் காலை 9.00 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் இயக்குநர் உத்தரவு.

🛑அலுவலகப் பணியாளர்கள் காலை 9.00 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் இயக்குநர் உத்தரவு.


🛑பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் விவரம் பின்வருமாறு 👇


CCK-Proceedings
Director Proceedings


🛑பொருள் :

பள்ளிக்கல்வி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்றப் பேரவை வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மாவட்ட அலுவலகங்களில் பணியாளர்கள் பணிபுரிதல் தொடர்பாக.


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 05.08.2026 முதல் 08.09.2026 வரை நடைபெறும் நிலையில், பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை 24.08.2026 அன்று நடைபெற உள்ளது. 


சட்டமன்ற பேரவையில் மாண்புமிகு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் எழுப்பப்படும் வெட்டுத் தீர்மானங்கள் மற்றும் வினாக்கள் மீது உடனுக்குடன் விரிவாக பதில் அளிக்க வேண்டியுள்ளது.


எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (இடைநிலை) பணிபுரியும் பணியாளர்கள் சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் முடியும் வரை தினந்தோறும் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வருகை புரிந்து சட்டமன்றப் பேரவை வினாக்களுக்கான விரிவான பதிலினை உடனடியாக தயார் செய்து பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கவும்



cckkalviseithikal
cckkalviseithikal


 அலுவலக நேரம் முடிந்த பிறகு அலுவலரின் அனுமதி பெற்றபின் அலுவலகத்தினை விட்டுச் செல்லவும் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு தெரிவித்துக் கொள்வதுடன்


🛑விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணியாளர்களை அலுவலகத்தில் பணிபுரிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (இடைநிலை) அறிவுறுத்தப்படுவதுடன் தலைமையகத்தை விட்டுச் செல்வதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

-பள்ளிக்கல்வி இயக்குநர்

Post a Comment

0 Comments