CCK Education News

📢மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 11 அறிவிப்புகள் இன்று சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டன

 📢மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 11 அறிவிப்புகள் இன்று (19.08.2026) சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டன. 


CCK-News
CCK-NEWS

Click here

📢1. அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பாக 365 நாட்கள் வழங்குதல்


தற்போது இரண்டுக்கும் குறைவான உயிருடன் உள்ள குழந்தைகளைக் கொண்ட (less than two surviving children) OT பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்களும் மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பணியாளர்களுக்கு பெண் 12 அரசுப் வாரங்களுக்கு மிகாமலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தமிழ்நாடு அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் நல அரசாக இருப்பதால், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பினை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.



cckkalviseithikal

📢2. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்கான " வெற்றிப் பாதை" செயலி உருவாக்குதல்


பணியாளர் தேர்வாணையம் (SSC), இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் பிற மத்திய, மாநில போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்கள், டிஜிட்டல் கற்றல் வசதிகள், நேரடி மற்றும் பதிவுசெய்யப்பட்ட வகுப்புகள், மாதிரித் தேர்வுகள். பயிற்சி வினாக்கள். கற்றல் வளங்கள், செயல்திறன் பகுப்பாய்வு, விரிவான விடை விளக்கங்கள் மற்றும் முன்னேற்றக் கண்காணிப்பு வசதிகளுடன் கற்றல் திறனை மேம்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் வெற்றிப் பாதை" என்ற செயலி ரூ.20 இலட்சம் செலவில் உருவாக்கப்படும்.



cckkalviseithikal


📢3. தமிழ்நாடு அரசுப் தேர்வாணையத்தில் இணைப்புக் கட்டடம் கட்டுதல்


பணியாளர் கூடுதல், தேர்வர்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்காக, பிரதான கட்டடத்துடன் இணைக்கும் பொதுத் தாழ்வாரத்துடன் கூடிய கூடுதல் இணைப்புக் கட்டடம் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் ( தரைத்தளம் + 5 தளங்கள்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் கட்டப்படும்.



📢4. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் கீழ் சமூக கண்காணிப்பு மையம் ஏற்படுத்துதல் ஊடக (SMMC)


ஊழல் தொடர்பான தகவல்கள், பொதுமக்களின் புகார்கள், ஊழல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் தகவல்கள் (Whistle-blower disclosures), வலைதளங்களில் வைரலாகப் பரவும் பதிவுகள், மறைமுக நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட காணொலி காட்சிகள் (sting operation footage) உடனடி அறிக்கைகள் போன்றவை, முதலில் சமூக ஊடக தளங்களிலும் தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் வெளிப்படுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய தகவல்களை முறையாகக் கண்காணித்து பாதுகாப்பதற்கென தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் தனிப்பட்ட வசதி ஏதும் இல்லாத காரணத்தால், முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டு,பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுவதற்கு முன்பே மாற்றப்படவோ, நீக்கப்படவோ அல்லது நிரந்தரமாகக் காணாமல் போகவோ வாய்ப்புள்ளது.

இந்த பொதுவெளியில் கிடைக்கும் 24 x 7 ஷிப்ட் தகவல் ஆதாரங்களை முறையில் தொடர்ந்து கண்காணிக்க, மைய பதிவு மற்றும் சேமிப்பு சேவையகம், காட்சி பலகைகள், பணி நிலையங்கள், தடங்கல் இல்லா ஆற்றல் வழங்கி (UPS), வலையமைப்பு (Networking) வசதிகளுடன், 1 ஆய்வாளர், 3 சார்பு ஆய்வாளர், 3 தலைமை காவலர் மற்றும் 3 காவலர் என 10 பணியாளர்களைக் கொண்ட ஒரு சமூக ஊடக கண்காணிப்பு மையம் (SMMC) ரூ.50 இலட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

📢5. தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கண்காணிப்பு அறையுடன் கூடிய மேம்பட்ட சிசிடிவி (CCTV) கேமரா அமைப்பு ஏற்படுத்துதல்


தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் வளாகத்தை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பை வலுப்படுத்தவும், வருகையாளர்கள் மற்றும் மனுதாரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பான சூழலை உறுதி செய்து அலுவல் நடவடிக்கைகள் இடையூறு இன்றி நடைபெறவும் கண்காணிப்பு அறையுடன் கூடிய மேம்பட்ட சிசிடிவி (CCTV) கேமரா அமைப்பு ரூ. 10 இலட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.



6. 'அ' மற்றும் 'ஆ' அடிப்படை பயிற்சி நிலையம் மற்றும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய வகுப்பறைகள், தங்கும் விடுதிகள், கலையரங்கம் மற்றும் விருந்தினர் அறைகள் ஆகியவற்றை புனரமைத்தல்


சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள காஞ்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் 'அ' மற்றும் 'ஆ' அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி நிலையம் மற்றும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் ஆகியவற்றிலுள்ள வகுப்பறைகளை மிடுக்கு வகுப்பறைகளாகவும், தங்கும் விடுதிகள், கலையரங்கம், விருந்தினர் அறைகள் ஆகியவற்றில் தேவையான அனைத்து வசதிகளுடன், பயிற்சியாளர்கள் சிறந்த சூழலில் பயிற்சி பெறும் பொருட்டு ரூ.2 கோடி செலவில் புனரமைக்கப்படும்.


7. பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் நவீன கணினி மையம் உருவாக்குதல்


பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் வருடத்திற்கு ஆறு அணிகளுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், பயிற்சியாளர்கள் கணினியில் தற்போதைய காலகட்டத்திற்கேற்றவாறு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்து, பணிகளைத் திறம்பட செயல்படுத்தும் நோக்குடன் அதற்கேற்ற சூழலில் கணினிப் பயிற்சியை மேற்கொள்ள பயிற்சி மையத்தில் அனைத்து நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கணினி ஆய்வகம் ரூ.1 கோடி செலவில் உருவாக்கப்படும்.



8. பவானிசாகர் பயிற்சி அரசு அலுவலர் நிலையத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைத்தல்


பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ஒரு அணிக்கு 9 5 0 அரசுப் பணியாளர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களது மனத்திறனையும், உடல் திறனையும் மேம்படுத்தி சிறப்பாக பயிற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு, பயிற்சி மையத்தில் உள்ள 7 ஏக்கர் பரப்பிலான இடத்தில் அரசுப் பணியாளர்கள் கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து மற்றும் விளையாடுவதற்கும் மற்றும் நடைபயிற்சி பாதை வசதி ஏற்படுத்தி ஆரோக்கியமான சூழலில் ஆர்வமுடன் பயிற்சி பெறும் பொருட்டு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ரூ. 2.25 கோடி செலவில் அமைக்கப்படும்.


9. போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அறிவுசார் மையங்களுடன் (Knowledge Centres) இணைத்தல்


பணியாளர் தேர்வாணையம் (SSC), இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் பிற மத்திய, மாநில போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் அறிவுசார் மையங்களுடன் (Knowledge Centres) இணைந்து செயல்படும் வகையில் தகுந்த உள்கட்டமைப்பு வசதி ரூ.1.30 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.



10. அரசுப் பணியாளர்களுக்கான இணைய வழி திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் (திறன் 360°) கூடுதலாக சட்டம் மற்றும் விதிகளை இணைத்தல்


அரசுப் பணியாளர்கள் தற்போதைய கால கட்டத்திற்கேற்ப தங்களது மேம்படுத்தி நிருவாகத்தில் திறனை திறம்பட (https://thiran360.tn.gov.in) பணிபுரியும் பொருட்டு திறன் 360° வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் தத்தம் அன்றாடப் பணிகளில் கையாளும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள் போன்ற மின்னணு கற்றல் தொகுதிகளை 5. 50 இலட்சம் செலவில் உருவாக்கி திறன் 360 இணையதளத்தில் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும்.


cckkalviseithikal

11. எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் 150 அரசு சேவைகள் வழங்குதல்


அரசு சேவைகளை பொது மக்களுக்கு எளிமையானதாகவும், விரைவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இதனைச் செயல்படுத்தும் வகையில், மனிதவள மேலாண்மைத் துறை " எளிமை ஆளுமை (SimpleGov) " என்ற முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் கீழ் G 2 C ( அரசு -மக்கள்), G2B (அரசு-வணிகம்), மற்றும் G2G (அரசு-அரசு) ஆகிய அனைத்து வகையான சேவைகள், உரிமங்கள். சான்றிதழ்கள், தடையின்மைச் சான்றிதழ்கள் (NOC), அனுமதிகள் ஒப்புதல்கள் சேவைகள் மறுசீரமைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்படும். மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளைக் பின்னர் முழுமையான இணையவழி கொண்ட தளங்கள் மூலம் முழுமையாக மின்னணு மயமாக்கப்படும்.


நடப்பு நிதியாண்டில், 150 அரசு சேவைகள், எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் எளிமைப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்காக மறுசீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் இணைய வழியில் வழங்கப்படும். இதன் மூலம் தடையற்ற, திறன் மிக்க மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அரசு சேவை வழங்கல் உறுதி செய்யப்படும்.

த.சரத்குமார்

மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்




Post a Comment

0 Comments