CCK Education News

🌀கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு.

 🌀கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு.

Click here

ந.க.எண்.எச்.1/2237/2025

இணை இயக்குநர் (க.சீ) அலுவலகம்.

மதுரை-20.

நாள்: 27.08.2026

Counseling
Counseling


சுற்றறிக்கை

பொருள்:

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகள் 2026-2027 ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் -கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் தெரிவித்தல் - தொடர்பாக.


பார்வை:

1. அரசாணை(டி) நிலை எண்.47, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் நல(பிந3(1))த்துறை. நாள்.02.06.2026

2. சென்னை. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்களின் கடிதம். 6.2/2334496/2025, 09.06.2026

3. சென்னை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்களின் செ.மு. .12/2334496/2025-1. . 20.07.2026

4. இவ்வலுவலக கடித ந.க.எண்.1/2237/2025 .25.07.2026 12.08.2026

5. சென்னை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்களின் செ.மு. 6.2/2334496/2025-1, நாள்.24.08.2026


மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 

அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்,சரக மேற்பார்வையாளர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் / காப்பாளினிகளுக்கும் 

2026-2027-ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக (EMIS) 01.07.2026 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வு


பார்வை 5-ல் காணும், ஆணையரக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கீழ்க்காணும் அட்டவணையின்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கல்வி மேலாண்மை தகவல் முகமை இணையதள (EMIS) வாயிலாக நடைபெறும் என. இவ்வலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து மேல்நிலை, உயர்நிலை.நடுநிலை, தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர்கள். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், சரக மேற்பார்வையாளர்கள். காப்பாளர் / காப்பாளினிகள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


Counseling-Schedule
Counseling-Schedule


மேலும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் (பாடவாரியாக) மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஆசிரியர்களும் 2 இந்நேர்வில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணையை அனைத்து வகை தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்து மேல்நிலை/உயர்நிலை /தொடக்கபள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் அறிவிக்கை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ஒம்/- ம.க.செ.சுபாஷினி இணை இயக்குநர்(க.சீ). மதுரை.

//உ.ந.உ.ப//

 இணை இயக்குநருக்காக. நேர்முக உதவியாளர்(.) மதுரை.

Post a Comment

0 Comments